Sunday, December 28, 2025

சேலத்தில் மருத்துவரின் லேப்டாப் செல்போன் திருட்டு.!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சேர்ந்தவர் அரவிந்த். இவர் குஜராத்தில் அரசு மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகை கொண்டாட நேற்று குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்து பிறகு அங்கிருந்து அரசு பேருந்தில் சேலத்திற்கு புறப்பட்டு வந்தார்.

நேற்று இரவு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் இறங்குவதற்காக தனது பேக்கை எடுக்க மேல் அடுக்கை பார்த்துள்ளார். அப்பொழுது மருத்துவர் அரவிந்தின் பேக் காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. அந்த பேக்கில் லேப்டாப், செல்போன், டேப், ப்ளூடூத் என ரூ.84,000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்துள்ளது. அவை அனைத்தையும் பேக்குடன் மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

இது பற்றி பள்ளப்பட்டி போலீசில் அரவிந்த் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருத்துவரின் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பேக்குடன் திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Related News

Latest News