நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21ஆம் தேதியும் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
