தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் “தவெக – அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை எழுப்ப முடியாது’’ என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
