போலீசார் முன்னிலையில் டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தல் தொடர்பாக, இரண்டு மாணவர் சங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து வருகிறது.
இந்தநிலையில், கல்லூரி முதல்வர் அறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் தீபிகா, பேராசிரியர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இந்த காணொளி, இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போலீசார் முன்னிலையிலேயே பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
