Sunday, December 28, 2025

கட்சியில் சேர்ந்த 2 நாளில் பாடகிக்கு சீட் ஒதுக்கீடு செய்த பாஜக

பீகார் சட்டசபை தேர்தல் நவம்பவர் மாதம் 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 71 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து நேற்று 12 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிடப்பட்டது. அதில், நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர், அலிநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதிலி தாக்கூர், பீகார் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலம் அடைந்தவர். கடந்த செவ்வாய் கிழமை கட்சியில் மைதிலி சேர்க்கப்பட்டார். கட்சியில் சேர்ந்த 2 நாளில் பிரபல நாட்டுப்புற பாடகிக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News