BSNL நிறுவனம் நாடு முழுவதும் தற்போது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரிவாக்கி வருகிறது. இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களே பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த சூழலில் பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இந்த ஒரு மாத காலத்தில் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி சேவை வழங்கப்பட இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிஎஸ்என்எல் உடன் புதிய வாடிக்கையாளர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல், ஒரு மாதம் முழுவதும் இலவச 4ஜி சேவையை அனுபவிக்க வாய்ப்பு தரப்படுகிறது.
புதிய வாடிக்கையாளர்கள் இந்த காலத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 2 ஜிபி ஹைஸ்பீடு டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு இலவச சிம்கார்டு பெறுவர். மேலும், எங்கெல்லாம் 4ஜி சேவை கிடைக்கிறதோ அங்கே அன்லிமிடெட் 4ஜி சேவையையும் பயன்படுத்தலாம். இதற்காக அவர்கள் 1 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் போதும்.
இந்த தீபாவளி சலுகை புதிய வாடிக்கையாளர்களை தரும் என்று பிஎஸ்என்எல் நம்பிக்கையை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே போன்ற சலுகையை அறிவித்து, அதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
