கர்நாடக மாநிலம் பெங்களுருவை சேர்ந்த கிருத்திகா ரெட்டி என்பவருக்கும் மகேந்திர ரெட்டி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். திடீரென கூச்சலிட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
கிருத்திகா ரெட்டியின் மரணமடைந்து 6 மாதங்களுக்கு பிறகு அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில் மகேந்திர ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகேந்திர ரெட்டியை விசாரித்தபோது அவர் கூறிய விவரங்கள் போலீஸை அதிர வைத்தது. திருமணத்திற்கு முன்பு கிருத்திகா ரெட்டிக்கு குறைந்த ரத்த அழுத்தம், அஜீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற பிரச்சினைகள் இருப்பதை அவருடைய பெற்றோர் மகேந்திரரிடம் மறைத்திருப்பதாகவும், திருமணத்துக்குப் பிறகு மகேந்திரருக்கு தெரிந்ததாகவும் கூறினார்.
கிருத்திகாவுக்கு அடிக்கடி வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டு வந்ததால், மகேந்திர ரெட்டி அவரை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வந்தது.
இதற்காக ஏப்ரல் மாதம் கிருத்திகா ரெட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டதற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், 21-ந் தேதி முதல் மகேந்திர ரெட்டி தொடர்ந்து மயக்க ஊசியை செலுத்தி வந்தார். இதனால் 23-ந் தேதி இரவு கிருத்திகா ரெட்டி உயிரிழந்தார். மாமனார் வீட்டில் வைத்து மனைவியை கொலை செய்து, யாரும் சந்தேகிக்காத விதத்தில் நடந்து கொண்டார் மகேந்திர ரெட்டி.
இந்த விவகாரத்தில் மகேந்திர ரெட்டியை கோர்ட்டில் ஆஜராக வைத்து காவலில் எடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் தெரிவித்தார்.
