Sunday, December 28, 2025

கேரளாவுக்கு வந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் திடீர் மரணம்..!

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஓடிங்கா (80) இன்று (புதன்கிழமை) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இன்று காலை நடைபயிற்சி செய்யும் போது மயங்கினார். பின்னர், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ரைலா ஒடிங்காவின் உடல் கென்யாவுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.

2008 மற்றும் 2013 இடையே கென்யாவின் பிரதமராக பணியாற்றிய ரெய்லா ஓடிங்கா, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News