பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் புதிய e-SIM சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த e-SIM சேவை, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் GSMA சான்றளிக்கப்பட்ட மூவ் பிளாட்ஃபார்ம் மூலமாக வழங்குகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 2ஜி, 3ஜி, 4ஜி இணைப்புகளை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் QR கோடு மூலம் ஆக்டிவேட் செய்யலாம். இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்தப் புதுமை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெளிநாட்டுச் செல்லும் பயனர்கள் ஒரு சிம் கார்டை பிஎஸ்என்எலுக்கு பயன்படுத்தி, மற்றொன்றை வெளிநாட்டு நெட்வொர்க்களில் பயன்படுத்த முடியும். இது இந்தியாவில் டிஜிட்டல் சுதந்திரத்தை மேலும் மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளது.
பிபிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஆகஸ்டில் டெல்லியில் தனது 4ஜி சேவைகளைத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவின் வாயிலாக இந்தியாவின் முழுநாட்டுப் பரப்பில் உள்ள 97,500க்கும் மேற்பட்ட மொபைல் டவர்களின் 4ஜி நெட்வொர்க்கை தொடங்கி வைத்தார். இதற்காக ரூ. 37,000 கோடி முதலீடு கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவன இந்திய தபால் துறையுடன் இணைந்து 1.65 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் சிம் கார்டுகள் மற்றும் ரீசார்ஜ் சேவைகளை வழங்கி வருகிறது, இதனால் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் வலுவாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் சோதனை முறையில் அறிமுகமான இந்த e-SIM சேவை தற்போது நாடு முழுவதும் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. கிளவுட் அடிப்படையிலான இந்த சேவை சிறந்த ரோமிங் வசதி மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்துடனும், தனியார் நிறுவனங்களுடன் போட்டி இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் வலிமையாக நிற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
