ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலின் தெற்கு வாயிலருகே தீ விபத்து ஏற்பட்டது. மின் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீயால் ஒரு பகுதியில் புகை எழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக தொல்லியல் ஆய்வு துறை மற்றும் டோரன்ட் பவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மின்சாரம் நிறுத்தப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
