மத்தியப் பிரதேசத்தில் மாநில நெடுஞ்சாலையில் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் – போபால் அருகே பில்கிரியா கிராமத்திற்கு அருகில் மாநில நெடுஞ்சாலையில் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு 30 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டது. இந்தச சம்பவத்தின்போது எந்த வாகனங்களும் செல்லவில்லை என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சாலை 2013ல் அமைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
