Sunday, December 28, 2025

20 லட்சம் பேரின் வேலையை பறிக்கும் AI : நிதி ஆயோக் தகவல்

ஏ.ஐ தாக்கத்தால், இந்தியாவின் ஐ.டி துறையில் பணியாற்றும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ தொடர்பான படிப்புகளை கற்றுக்கொள்வதால், அடுத்த 5 ஆண்டுகளில், புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏ.ஐ குறித்த பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களே வேலையை இழக்க நேரிடும்.

இது வெறும் 20 லட்சம் பேர் வேலை இழப்பு சம்பந்தப்பட்டது மட்டுமின்றி; 2 – 3 கோடி பேரின் வருமானத்துடன் தொடர்புடையது ஆகும். எனவே, தனிநபர்கள் ஏ.ஐ., தொடர்பான பயிற்சியில் இணைந்து, தங்கள் சூழலுக்கு ஏற்ப திறமையை தகவலமைத்து கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

Related News

Latest News