Sunday, December 28, 2025

போலியான கோல்கேட் பேஸ்ட் தயாரித்த கும்பல் கைது

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கபுஸ்தி பகுதியில் போலி பேஸ்ட் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தொழிற்சாலையில் சோதனையிட்டனர். அப்போது, விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேஸ்ட் அனைத்தும் உண்மையான கோல்கேட் போலவே இருந்தன.

பின்னர் போலீசார் அவற்றை ஆய்வு செய்தபோது, நிறம் மற்றும் வாசனையில் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 9.43 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி கோல்கேட் பேஸ்ட்டை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த போலி கோல்கேட் தயாரிப்பு எந்த அளவிற்கு பரவியுள்ளது, எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related News

Latest News