Sunday, December 28, 2025

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் – பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி

பீகார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6,11 ஆம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14ஆம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது.

இந்த தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயககூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. அதேப்போல், தேர்​தல் வியூக நிபுணர் பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்​சி தனித்​துப் போட்​டி​யிடு​கிறது.

இந்தநிலையில், பீகாரில் மதுவிலக்கால் 28 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மது அருந்துவதற்கும், விற்பனைக்கும் உள்ள தடையை உடனே நீக்குவோம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 28 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சேமிக்க முடியும். அதை பயன்படுத்தி உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் 5 லட்சம் கோடி முதல் 6 லட்சம் கோடி வரை கடன் பெறுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News