Sunday, December 28, 2025

ஆசையாய் வளர்த்த மரம் வெட்டப்பட்டதால் கதறி அழுத மூதாட்டி

சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்த்த அரச மரம் வெட்டப்பட்டதால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழுத வீடியோ நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் சாரா கோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 85 வயது மூதாட்டி தியோலா பாய். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் அரச மரக்கன்றை மரமாக நட்டு வளர்த்துள்ளார். அது தற்போது மிகப்பெரிய மரமாக வளர்ந்திருந்தது.

இந்தநிலையில், பணத்தாசை பிடித்த மர்ம நபர்கள் சிலர், அரச மரத்தை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த மூதாட்டி தியோலா பாய், வெட்டப்பட்ட மரத்தின் அருகே அமர்ந்து அதில் முட்டி கதறி அழுதார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது. மரங்களுடன் மனிதர்களும் நேசமாக இணைந்தே உள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Related News

Latest News