உத்தரகாண்ட்டில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ஊடுருவியவர்தான் யோகி ஆதித்யநாத் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் ஊடுருவி வருவதாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்திலும் ஊடுருவியவர்கள் உள்ளார்கள் என்று கூறிய அகிலேஷ் யாதவ், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உண்மையில் உத்தரகாண்ட்டில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ஊடுருவியவர் என்று தெரிவித்தார். யோகி ஆதித்யநாத்தை உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
