வருமானம் குறைந்ததால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, சினிமாவில் நடிக்க போவதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி, மத்திய இணையமைச்சராக உள்ளார். இந்நிலையில், கேரளாவின் கன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, வருமானம் முற்றிலுமாக நின்றுவிட்டது என்றும் மீண்டும் திரைப்பட நடிப்பை தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் தனக்கு பதிலாக ராஜ்யசபா எம்.பி-யாக உள்ள சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த சுரேஷ் கோபி, இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று கூறினார்.
