Monday, December 1, 2025

அடுத்தவங்க கொட்டாவி விடும் போது உங்களுக்கும் வருதா? இதுதான் காரணமாம்!

நம்மில் யாராவது ஒருவர் கொட்டாவி விடும் போது, அருகிலிருப்பவர் கூட தன்னிச்சையாக கொட்டாவி விடுவதை அனைவரும் கவனித்திருப்பீர். இது சலிப்பு அல்லது தூக்கத்துக்கான பதிலா? உண்மையில், கொட்டாவி விடுவதற்கு விஞ்ஞான அடிப்படையுடைய காரணம் இருக்கிறது.

கொட்டாவி விடுவது என்றால் நமது மூளை தன்னை குளிர்விக்க கொண்டு செய்யும் இயற்கையான ஒரு செயலாகும். குறிப்பாக கோடைக்காலத்தில் அதிகமாக கொட்டாவி வரும். ஏனெனில் அந்த நேரத்தில் மூளையின் வெப்பம் அதிகமாக இருக்கும்.

கொட்டாவி விடும் போதே நமது நுரையீரலில் ஆக்சிஜன் அதிகமாக செல்வதால், இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதனால் மூளை குளிர்ந்து புத்துணர்ச்சி ஏற்படும். சோர்வோ அல்லது தூக்கமோ இருந்தாலும், கொட்டாவி மூளையை “Refresh” செய்யும் ஒரு இயற்கை முயற்சி.

அடுத்தவர் கொட்டாவி விடும் போது நமக்கும் ஏன் வருகிறது?

அது ஒரு “சம்பவச்செயல்” அல்ல. இதற்கு எம்பதி (Empathy) தான் காரணம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எம்பதி என்றால் மற்றவரின் உணர்ச்சியை நம்மால் உணர்வது.

ஒருவர் கொட்டாவி விடும்போது, அவரின் நிலையை மனதில் பிரதிபலிக்கும் ஒருவர் (அதாவது எம்பதி உள்ளவர்) தானாகவே கொட்டாவி விடுவார். ஆனால், மற்றவரின் உணர்ச்சியை உணர முடியாதவர்கள் எம்பதி குறைவானவர்கள் அடுத்தவர் கொட்டாவி விட்டாலும், அவர்களுக்கு அதேபோல் கொட்டாவி வராது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News