நெல்லை மாநகராட்சி கூட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தவறிய நிர்வாகத்தை கண்டித்து, 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் வந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நெல்லை மாநகராட்சியின் சாதாரண கூட்டம், மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பவுல்ராஜ், கையில் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரை குறித்த புகைப்பட ஆதாரத்தையும் ஏந்தியபடி மன்றத்திற்குள் வந்தார்.
மேயர் மற்றும் துணை மேயர் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி சென்று, நீங்கள் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி, அந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மேஜையின் மீது வைத்தார். கவுன்சிலரின் இந்த செயலால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க தவறிய நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
