Friday, October 10, 2025

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம்! எதுவென்று தெரியுமா?

சென்னை நகரின் வடபகுதியில் அமைந்துள்ள ராயபுரம் ரயில் நிலையம், இந்தியாவின் தெற்கு ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாகத் இருக்கிறது. 1856-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, மதராஸ் பிரெஸிடென்சி காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியினரால் தொடங்கப்பட்ட இந்த நிலையம், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். அன்றைய தினம், ராயபுரம் முதல் அரக்கோணம் சென்ற ரயில் சேவை மூலம் தென்னிந்திய ரயில் போக்குவரத்து தொடங்கியது.

அப்போதைய காலத்தில், ராயபுரம் நிலையம் ஒரு பிரமாண்டமான கட்டடமாக அமைக்கப்பட்டது. ஆங்கிலக் கட்டிடகலை முறையில் கட்டப்பட்ட இந்நிலையம், இன்றும் அந்த காலத்தின் பொற்கால நினைவாக உள்ளது. 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டுக்காக முதன்மையாக பயன்படுத்தப்பட்ட இந்நிலையம், அக்காலத்தில் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக இருந்தது.

ராயபுரம் நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், அது தெற்கு ரயில்வேயின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. சென்னை Central ரயில் நிலையம் அல்லது Egmore ரயில் நிலையம் கட்டப்படுவதற்கு முன்னரே, ராயபுரமே சென்னை நகரின் பிரதான ரயில் நிலையமாக விளங்கியது.

காலப்போக்கில், முக்கியத்துவம் குறைந்தாலும், இந்நிலையம் இன்று வரலாற்று சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. 2005-ஆம் ஆண்டு, இது தேசிய பாரம்பரியக் கட்டிடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது சில ரயில்கள் இங்கிருந்து இயங்கினாலும், பெரும்பாலும் இது பாரம்பரிய நினைவுச்சின்னமாக மட்டுமே பயன்படுகிறது.

சென்னையின் போக்குவரத்து வளர்ச்சியின் அடித்தளமாக இருந்த ராயபுரம் ரயில் நிலையம், நகரின் வரலாற்று சிறப்பை நினைவூட்டும் முக்கிய சின்னமாக இன்றும் திகழ்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News