வாட்ஸ் அப் உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு செயலி ஆகும். இந்த செயலி இல்லாத ஸ்மார்ட்போனே கிடையது என்றே சொல்லலாம். தற்போது, வாட்ஸ் அப் புதிய ஒரு வசதியைக் குறித்து பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளது.
இதன் மூலம், உங்கள் மொபைல் எண்ணை பகிராமல் மற்றவர்களை வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ள முடியும். இதுவரை, யாரையாவது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள, அவருடைய போன் எண்ணைப் பெறவேண்டும் என்பதே கட்டாயமாக இருந்தது. ஆனால் விரைவில், வாட்ஸ் அப் புதிய யூசர் நேம் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த புதிய வசதியுடைய மூலம், ஒருவரின் போன் நம்பர் இல்லாமல் அவருடைய யூசர் நேம் போதும். இதனால் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் வாட்ஸ் அப் எண்ணை பகிர்ந்து, அச்சமடைய வேண்டிய தேவையில்லை.
ஜிமெயிலில் மின்னஞ்சல் பெயர் தேர்ந்தெடுக்கும் முறையைப் போன்றே, வாட்ஸ் அப்பிலும் ஒரே பெயரை கொண்டவர்களால் பயன்படுத்தப்படும் யூசர் நேமை கருதி, அதை முன்கூட்டியே ரிசர்வ் செய்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட இருக்கிறது.
ஒரே பெயர் கொண்ட பலர் இருந்தாலும், வேறுபட்ட யூசர் நேம் பெற முடியும். விரைவில் இதுபோன்ற சேவைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.