சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய விட்டது.
இந்த ஆண்டு தொடக்க மாதமான ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31.200 அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதிய உச்சமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது.தங்கம் விலை நேற்று 2 முறை உயர்ந்தது. அதாவது, காலையில் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90.400-க்கு விற்பனையானது. மேலும், 2-வது முறையாக ரூ.680 உயர்ந்து ரூ.91.080-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன் படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.91.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே, வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.171-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1. 71.000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.