Thursday, October 9, 2025

AI உங்க பணத்தை காலி பண்ணிடுமா? ரிசர்வ் வங்கியின் பகீர் எச்சரிக்கை! உடனே பாருங்க!

தொழில்நுட்பத்தின் உச்சமாய் வளர்ந்து வரும் Artificial Intelligence (AI), உங்க பணத்திற்கும், உங்களின் சேமிப்பிற்கும் ஆபத்தாக முடியுமா? இந்த அதிமுக்கிய கேள்வியை எழுப்பியிருக்கிறார் நமது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி. ரபி சங்கர்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், நிதித்துறையில் AI-ன் இரட்டைப் பங்கு பற்றி விளக்கினார். AI நிதிச் சேவைகளை இன்னும் திறமையாக்கும், புதுமைகளை உருவாக்கும், பின்தங்கிய மக்களுக்கும் நிதி வசதிகளைக் கொண்டு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனா, இந்த AI-யை சரியான மேற்பார்வை இல்லாம பயன்படுத்தினால், இது முன்னெப்போதும் இல்லாத அபாயங்களை ஏற்படுத்தும்னு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

நிதித்துறை, நம்பிக்கைங்கிற அடித்தளத்துல கட்டப்பட்டது. இங்க ஒரு சின்னத் தவறு நடந்தா கூட, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். AI-யில இருக்கக்கூடிய அல்காரிதமிக் சார்பு, வெளிப்படைத்தன்மை இல்லாத ‘பிளாக் பாக்ஸ்’ சிக்கல், AI மூலமா நடக்கும் வர்த்தகத்தால் சந்தை ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடு என பல அச்சுறுத்தல்கள் இருக்கு. இது உங்களோட பணம், சேமிப்பு எல்லாத்தையுமே பாதிக்கலாம். வேலைவாய்ப்புகளைக் கூட இது கேள்விக்குள்ளாக்கலாம்னு ரிசர்வ் வங்கி அதிகாரி கவலை தெரிவிச்சார்.

ஆனால், இந்த அபாயங்களைத் தடுக்க, ‘வடிவமைப்பு மூலம் பாதுகாப்பு’ அவசியம்னு அவர் அழுத்தமா சொல்லியிருக்காரு. அதாவது, AI சிஸ்டங்களை உருவாக்கும்போதே அதுல பாதுகாப்பு அம்சங்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்யணும். ரிசர்வ் வங்கி கூட, மோசடிகளைக் கண்டுபிடிக்க ‘MuleHunter.ai’ போன்ற AI கருவிகளை வெற்றிகரமா பயன்படுத்தி வருது.

நம்பிக்கை, நெறிமுறைகள், சரியான பயிற்சி, நல்ல நோக்கத்துக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துறது, மற்றும் ஒற்றுமையுடன் செயல்படுவதுன்னு AI-ஐ பாதுகாப்பா நிதித்துறையில இணைப்பதற்கான அஞ்சு முக்கியமான தூண்களையும் அவர் கோடிட்டுக் காட்டினார். புதுமைகளை வரவேற்கும் அதேவேளையில், புதிய அச்சுறுத்தல்கள் உருவாகிடாமப் பார்த்துகிறது நம்ம கடமை.

AI ஒரு சக்திவாய்ந்த கருவி. அதை பொறுப்புடன் பயன்படுத்தும்போது, அது நிச்சயம் நமக்கு ஒரு வரப்பிரசாதமா இருக்கும்னு ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நம்பிக்கை தெரிவிச்சிருக்காரு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News