Thursday, October 9, 2025

தோனியின் குரலை கேட்டதும் சிரித்த ரோஹித்!! வைரல் வீடியோ!!

இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான CAT நிறுவனத்தால் CAT விருதுகள் ஆண்டு தோறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் சிறந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த CAT கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இது கிரிக்கெட் உலகில் வீரர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் முதல் விருது திட்டங்களில் ஒன்றாகும்.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்-ரவுண்டர் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில் விருந்தினர்களை மகிழ்விக்க, வைரல் மிமிக்ரி கலைஞர் ஷாரங் ஷ்ரிங்கர்பூர் கலந்து கொண்டார்.

அவர் எம்.எஸ். தோனி, ரிக்கி பாண்டிங் மற்றும் டேனி மோரிசன் ஆகியோரை அவர் போல சிறப்பாக நடித்தார். அதில் குறிப்பாக எம்.எஸ். தோனி போல மிமிங்கிரி செய்தார். அதனை கண்ட ரோகித் சர்மா விழுந்து விழுந்து சிரித்தார். மேலும் அவர் பின்னாடி அமர்ந்திருந்த அவரது மனைவியிடம் அருகில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கனே வில்லியம்சனிடமும் அவரே மாதிரியே பேசுறாங்க என்பது போல சைகை காட்டினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News