Thursday, October 9, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிறிஸில்டா குற்றச்சாட்டு! அரங்கேறிய தரமான நடந்த சம்பவம்!

சமையல் மூலம் பிரபலமானவரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிறிஸில்டா கொடுத்துள்ள புகார், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் இருவரும் இருக்கும் குறித்த வீடியோகளையும், படங்களையும் பகிர்ந்திருந்தார். காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் ஒன்றை அளித்துள்ளார். வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார்.

அந்த புகாரில், “மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தன்னைப் போல் 10 பெண்களை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியுள்ளார் என்றும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து பேசிய வழக்கறிஞர் சுதா, “மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஜாய் கிரிஸில்டாவை ஏமாற்றியது போல தன்னையும் ஏமாற்றி விட்டதாக 10க்கும் மேற்பட்ட பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். அந்த ஆவணங்களை சேகரித்து நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளோம். அந்த பெண்களும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு கொடுக்க தயாராக உள்ளார்கள். இதனை தொடர்ந்து பேசிய ஜாய் கிரிஸில்டா, “எனக்கும் எனது குழந்தைக்கும் ஏதவது ஒன்று நடந்தால் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News