Tuesday, October 7, 2025

விண்வெளியில் புதிய கண்டுபிடிப்பு! வியாழன் கிரகத்தை விட பெரியதா?

விண்வெளி ஆய்வில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில், விஞ்ஞானிகள் கவனம் செலுத்தியிருக்கும் வினோதமான விண்மீன் பொருள் தான் CHA 1107-7626. இது “Chamaeleon constellation” பகுதியில், பூமியிலிருந்து சுமார் 500 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

முன்னதாக CHA 1107-7626 முதலில் பழைய நட்சத்திரமா அல்லது மிகச் சிறிய பழுப்பு நிற குறு நட்சத்திரமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் பின்பு ஆய்வுகள் தெரிவித்தது என்னவென்றால், இது சாதாரண நட்சத்திரம் அல்ல. மாறாக ஒரு விண்வெளிக் கிரகம் என்பதே. இதன் அளவு வியாழன் கிரகத்தை விட சற்று பெரியதாக இருந்தாலும், முழுமையான நட்சத்திரமாக வளர போதுமான எரிபொருள் அதாவது hydrogen இதில் இல்லை.

இந்த விண்வெளிப் பொருளைச் சுற்றி தூசி மற்றும் வாயுக்கள் கொண்ட ஒரு discovery disk இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது, CHA 1107-7626 இன்னும் “வளர்ந்து கொண்டிருக்கும்” விண்வெளி குழந்தை என்று சொல்லலாம். விஞ்ஞானிகள் இதன் மூலம், நட்சத்திரங்களும் கிரகங்களும் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயல்கின்றனர்.

மேலும், ஹபுல் மற்றும் Spitzer தொலைநோக்கிகளின் கண்காணிப்புகள் இந்தக் கண்டுபிடிப்புக்கு வலுவான ஆதாரங்களை சேர்த்துள்ளன. இது போன்ற விண்வெளிக் கருவிகள், CHA 1107-7626-ன் அமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு புரிதல் அளிக்கின்றன.

மொத்தத்தில், CHA 1107-7626, மனித குலத்திற்கு இன்னும் தெரியாத பல விண்வெளி ரகசியங்களை வெளிச்சம் போட்டு காட்டும் வியப்பூட்டும் கிரகமாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News