சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் அரங்கத்தில் திமுக-வின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும் எம்.பி.யும் டி.ஆர் பாலு, எம்பியும் துணை பொதுச் செயலாளருமான திருச்சி சிவா, மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது திமுக வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயலாற்ற வேண்டும் என திருச்சி சிவா அறிவுரை வழங்கினார். பீகார் போல வாக்குத்திருட்டில் ஈடுபட முயன்றால் பாஜகவின் முயற்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்று குறிப்பிட்டார்.
தேர்தல் நேரத்தில், பாஜகவினர் வாக்குத்திருட்டில் ஈடுபட முயற்சிப்பார்கள், அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை திமுக வாக்கு சாவடி முகவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் திருச்சி சிவா கூறினார்.