கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நவ்யா(வயது 28). இவரது கணவர் சைலேஷ். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் சிறிது காலம் மட்டுமே 2 பேரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
திருமணத்தின்போது சைலேஷ் கேட்ட வரதட்சணையை நவ்யாவின் பெற்றோர் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நவ்யாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு வற்புறுத்தியுள்ளனர். மேலும் சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நவ்யாவை துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த நவ்யா, மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நவ்யாவின் பெற்றோர், சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.