Monday, October 6, 2025

அதிரவிடும் எலான் மஸ்க்! விக்கிபீடியாவிற்கு போட்டியாக வருகிறது ‘க்ரோகிபீடியா!’ புதுசா என்ன இருக்கு?

உலகின் மிகப்பெரிய தகவல் தளமான விக்கிபீடியாவிற்கு போட்டியாக, எலான் மஸ்க், Grokipedia என்ற புதிய AI அடிப்படையிலான தகவல் தளத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக இணையத்தில் தகவல் தேடுபவர்கள் அனைவருக்கும் விக்கிபீடியா முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. அங்கு இல்லாத தகவல்கள் மிகக் குறைவு என்பதால், அது ஒரு தகவல் களஞ்சியமாக பார்க்கப்படுகிறது. இதே துறையில் போட்டியாளராக வரும் Grokipedia, xAI நிறுவனத்தால் உருவாக்கப்படுகின்றது.

எலான் மஸ்க் தெரிவித்துள்ளதன் படி, Grokipedia-வின் Bete பதிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Grok AI மூலம் ஆராய்ந்து, பயனர்களுக்கு துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். மேலும், இந்த முயற்சிக்கு மக்களின் ஆதரவும் அவசியம் என மஸ்க் கூறியுள்ளார்.

சமீபத்தில் @amXFreeze என்ற எக்ஸ் பயனரின் பதிவை மஸ்க் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், Grokipedia ‘மனிதர்களுக்கும் AI-க்கும் உலகின் மிகப்பெரிய, மிகத் துல்லியமான அறிவுத் தளம். மேலும் இதன் பயன்பாட்டிற்கு எந்த வரம்பும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், Grokipedia விக்கிபீடியா போன்ற ஆதாரங்களை ஆய்வு செய்து, உண்மை, பாதி உண்மை, பொய் அல்லது விடுபட்ட தகவல்களை தெளிவுபடுத்தும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. சார்பு அல்லது மறைக்கப்பட்ட நோக்கங்கள் இன்றி, உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தகவல் தளமாக இது இருக்கும் என மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News