Sunday, October 5, 2025

ஒரு டிஜிட்டல் வாட்ச்! உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ரகசியம்! பிரபல அரசியல் புள்ளியின் கிளாசிக் தேர்வு!

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல அரசியல் புள்ளி ஒருவர் சமீபத்தில் Casio F91W டிஜிட்டல் வாட்ச் அணிந்திருப்பது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த வாட்ச் அதன் எளிமையான வடிவமைப்பு, குறைந்த விலை மற்றும் நீண்ட ஆயுள் பேட்டரி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானது.

Casio F91W வாட்ச் 1989-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அகலம் 37.5 மிமீ, தடிமன் 8.5 மிமீ, எடை 21 கிராம் மட்டுமே. வாட்ச் ஒரு 1/100 Second ஸ்டாப்வாட்ச், தினசரி அலாரம், ஒளி, 12/24 மணி அமைப்பு மற்றும் ஆட்டோ காலண்டர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. CR2016 லித்தியம் பேட்டரியால் இயங்கும் இந்த வாட்ச் சுமார் 7 ஆண்டுகள் பேட்டரி ஆயுள் தருகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த வாட்ச்சை அணிந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், உதயநிதி ஸ்டாலின் இந்த வாட்ச் அணிந்திருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. Casio F91W வாட்ச்-சின் எளிமையான வடிவமைப்பு மற்றும் நம்பகமான செயல்பாடு போன்றவையே பிரபலங்களும் விரும்பும் காரணமாக இருக்கிறது.

இதன் மூலம் Casio F91W உலகப்புகழ்பெற்ற டிஜிட்டல் வாட்ச்களில் ஒன்றாகும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. இதன் குறைந்த விலை மற்றும் நீண்ட ஆயுள் பேட்டரி காரணமாக பலர் தினசரி பயன்பாட்டுக்காக விரும்புகின்றனர். மேலும் இதன் விலை ஏறக்குறைய 1,200 ரூபாய் என்பதால் இது எளிமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News