கல்லீரலும் சரும ஆரோக்கியமும் காக்க சிறந்த இயற்கை ஜூஸ் ABC ஜூஸ் ஆகும், அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவற்றின் கலவை. இதை தினசரி குடித்தால் உடல் புத்துணர்ச்சி தரும் மற்றும் சுவையும் நன்றாக இருக்கும்.
ABC ஜூஸின் பலன்கள்:
கல்லீரல் சுத்தம்
பீட்ரூட்டின் ஆன்டி ஆக்சிடன்ட்கள் கல்லீரலை சுத்தம் செய்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.
சரும பிரகாசம்
ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் A, C சருமத்தை ஒளிரச் செய்யும் மற்றும் பிம்பிள்கள், முகப்பருவை குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பைட்டோநியூட்ரியன்ட்கள் உடல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறன.
எடை கட்டுப்பாடு
குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து வாய்ந்ததால் வயிறு நிறைவு கொண்டிருக்கும் உணர்ச்சியை தருகிறது.
சுவாச நோய்களுக்கு உதவி
வீசிங், ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு சுவாச குழாய்களை சுத்தம் செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)