Friday, October 3, 2025

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் படுத்தே விட்டது : முக்கிய தகவலை சொன்ன அதிகாரி

இந்தியாவால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதல், பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிட்டது. இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது எனவும், அதற்கான ஆதாரங்களை இந்தியா சர்வதேச அரங்கில் வலியுறுத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலின் பின்னணியையும், அதன் முக்கியத்துவத்தையும் முதல்முறையாக விமானப்படை மார்ஷல் ஏபி சிங் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:

இந்த தாக்குதலில், 300 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்திற்கு இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கான தெளிவான சான்றுகள் எங்களிடம் உள்ளன. இது SIGNIT (சிக்னல் இன்டலிஜன்ஸ்) விமானமாகவோ அல்லது AEW&C (ஏர்லி வார்னிங் அண்ட் கண்ட்ரோல்) விமானமாகவோ இருக்கலாம். மேலும், பாகிஸ்தானின் F-16 மற்றும் JF-17 போர் விமானங்களில் ஐந்து உயர் தொழில்நுட்ப போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தான் பகுதிக்குள் 300 கி.மீ. தூரம் சென்று தாக்குதல் நடத்தியது, இந்திய விமானப்படையின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக நீளமான தூர தாக்குதலாகும். இது இந்த ஆண்டுக்கான இந்திய விமானப்படையின் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும்.

பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், விமான ஓடுபாதைகள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் மீது மிகத் துல்லியமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மேலும் 4–5 F-16 போர் விமானங்கள் தரையிலேயே அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு உளவியல் ரீதியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால்தான் பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு வரத் துவங்கியது” என ஏபி சிங் விளக்கினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News