வியட்நாமில் ஆறு வயது சிறுவன் ஒருவன், உணவு சாப்பிட்ட பின்னர் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுதலாக 2 செ.மீ நீளமான காந்தத்தை விழுங்கியுள்ளான்.
இதை கவனித்த சிறுவனின் பெற்றோர் உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு சென்றனர். சிறுவனை எக்ஸ்-ரே எடுத்த போது, அந்த காந்தம் சிறுவனின் குடலில் சிக்கியுள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து எண்டோஸ்கோபி மூலம் அந்த காந்தத்தை அகற்றினர்.
இதில் சிறுவனுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகு மாலை சிறுவன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
வியட்நாமின் வின் லாங் பகுதியில் உள்ள ஜூயென் ஜெனரல் ஹாஸ்பிடலில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.
நாணயங்கள், பட்டன் பேட்டரிகள், காந்தப் பொருட்கள் போன்ற சிறிய பொருட்கள் மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகளின் அருகில் இருக்கக் கூடாது என்றும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.