அனுஷ்காவின் வாழ்க்கையில் பல சூப்பர் ஹிட் படங்கள் இருக்கிறது. ஆனால் அவரின் கேரியரில் அருந்ததி திரைப்படம்மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இந்த திகில் திரில்லர் படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது.
இப்படம் சுமார் 13 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 70 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தப் படத்திற்குப் பிறகு, அனுஷ்கா ரசிகர்கள் பட்டாளம் பெருகியது. பாகுபலி போன்ற பான் இந்திய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும், இப்படத்தில் அனுஷ்கா ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்படவில்லை.

அதாவது, அருந்ததி படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை தயாரிப்பாளர்கள் முதலில் அணுகியிருந்தனர். அவர்கள் கதையையும் கூறியிருந்தனர். இருப்பினும், இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பே அருந்ததி படத்திலிருந்து மம்தா விலகிவிட்டார். இதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
மேலும், மம்தா மோகன்தாஸ் அந்த படத்தில் இருந்து விலகியது மிகப்பெரிய தவறு என இயக்குனர் S.S ராஜமௌலி அவரிடம் கூறினார். “இவ்வளவு பெரிய படத்தை இந்த தயாரிப்பாளரால் எடுத்து முடிக்க முடியாது என மேனேஜர் சொன்னதை கேட்டு அந்த முடிவை எடுத்துவிட்டேன்” என மம்தா மோகன்தாஸ் விளக்கம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.