ஆஃப்கானிஸ்தானில் கடந்த 48 மணி நேரமாக முடக்கப்பட்டிருந்த மொபைல் மற்றும் இணைய சேவைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் ஏன் முடக்கப்பட்டன, ஏன் மீண்டும் செயல்படுத்தப்பட்டது என்பதற்கு தாலிபான் ஆட்சி தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கமும் கிடைக்கவில்லை. ஆனால் தகவல் துறையில் உள்ள ஓர் தாலிபான் அதிகாரி, இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்தது என்றும், சேவைகள் விரைவில் திரும்பும் என்றும் கூறியுள்ளார்.