Thursday, October 2, 2025

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் அப்டேட்!!

நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’.. இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது.

‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

முதல் பாகம் போல் இல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனிடையே, சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News