Thursday, October 2, 2025

‘பாதாம் தான் சாப்பிடணும்னு இல்ல’.. இதுல இருந்தும் புரதம் கிடைக்கும்.. ‘இது’ ஏழைகளின் பாதாம்!

வேர்க்கடலையை எப்படி சாப்பிட்டாலும் அதன் சுவை நன்றாக இருக்கும். வேர்க்கடலைக்கு உண்மையா பெயர் நிலக்கடலை அழைப்பார்கள்.இதனை சாப்பிடும் போது சத்துக்கள் அப்படியே நமக்கு கிடைக்கும்.

இது புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த சத்தான உணவாகும். இதை பச்சையாகவோ, வறுத்தோ, அவித்தோ அல்லது வேர்க்கடலை வெண்ணெய், சட்னி, லட்டு போன்ற பல்வேறு உணவு வகைகளாகவும் சமைக்கலாம்.மேலும் வேர்க்கடலை தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட ஒரு பருப்பு வகை பயிராகும் என்கின்றனர்.

குறிப்பாக ஏழைகளின் பாதாம் என்றே வேர்க்கடலையை சொல்லலாம்.

ஹெல்த்லைனின் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 100 கிராம் பச்சை வேர்க்கடலையில் 567 கலோரிகள் உள்ளன. மேலும், புரதச்சத்து – 25.8 கி, கார்போஹைட்ரேட்- 16.1 கி, சர்க்கரை – 4.7 கி, நார்ச்சத்து- 8.5 கி, ஒமேகா-6 – 15.56 கி ஆகியவை உள்ளது என்கின்றனர்.

இவை தவிர பயோட்டின், தாமிரம், நியாசின், ஃபோலேட், மாங்கனீசு, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய தாதுக்களும், நுண் ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்!!

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும். மேலும், கெட்ட கொழுப்பு குறையும். குறிப்பாக இதய ஆரோக்கியம் மேம்படும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. மூளை செயல்பாட்டிற்கு சிறந்தது. தசை வலிமைக்கு உதவும் என்கின்றனர். ஆனால் இதை சாப்பிடும்போது சில தவறுகளை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

அதாவது, வேர்க்கடலையை அதிகம் சாப்பிடக் கூடாது. அதிக கலோரிகள் இருப்பதால் எடை அதிகரிக்கும். சிலருக்கு வேர்க்கடலை உண்பது வீக்கம் அல்லது வாயு ஆகிய செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்கின்றனர்.

மேலும், பச்சை வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலும் இது செரிமான கோளாறை ஏற்படுத்தும் என்பதால் ஊறவைத்து சாப்பிடலாம் அல்லது வறுத்தோ, அவித்தோ சாப்பிடலாம். இது செரிமான பிரச்சனைகளை தவிர்க்கவும், ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும் என்கின்றனர்.

குறிப்பாக உங்கள் உணவு பழக்கவழக்கத்தில் ஏதேனும் மாற்றத்தை கொண்டுவர நினைத்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு மாற்றுவது மிகச்சிறந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News