கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்து, ஜோ பைடன் வென்று இருந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி தன் தோல்வியை ஏற்றுக்கொள்ள டிரம்ப் மறுத்தார்.
இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் டிரம்பின் சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு எதிராக டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், டிரம்புக்கு 24.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 217 கோடி) நஷ்ட ஈடாக வழங்க யூடியூப் ஒப்புக் கொண்டுள்ளது.