லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தி சிலை உள்ளது. தியான நிலையில் காந்தி இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு அடையாளமாகவும் இந்த சிலை போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி இங்கு கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்த விவரத்தை அறிந்த இந்திய தூதரகம், இந்த செயல் வெட்கக்கேடானது என்று கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளது. மேலும், இதுகுறித்து உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.