அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரசு ஊழியர்கள் ஒரு லட்சம் பேர் இன்று ராஜினாமா செய்ய உள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடிவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டிலும் தன் அதிரடியை காட்டி அதிர்ச்சியளித்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதை இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, இன்று ஒரு லட்சம் ஊழியர்கள் ராஜினாமா செய்கின்றனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான அரசு ஊழியர்களின் ராஜினாமா இன்று நடைபெற உள்ளது. இந்த எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் 3 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.