Thursday, December 25, 2025

காதலிப்பதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்

தெலுங்கானா மாநிலம் ரேசப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான சதீஷ் என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இவர்களது காதல் பெண் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சதீஷை அழைத்து கண்டித்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பணியும் வேகமாக நடந்தது. இஇதனால் அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும், பெண் கேட்டு யாரும் வர வேண்டாம் எனவும் சதீஷ் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதை பார்த்த பெண் குடும்பத்தினர் மேலும் கோபம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை அடித்தே கொன்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News