Saturday, September 27, 2025

கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா., என்ன காரணம்?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்நிலையில் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா அதிபர் குஸ்டாவோ, “காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது விசா ரத்து செய்யப்பட்டது குறித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா ரத்து செய்யப்பட்டள்ளது. இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இனிமேலும் ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News