நாம் அனைவரும் தண்ணீர் சூடாக்க சோலார் ஹீட்டரைப் பயன்படுத்துவோம், ஆனால் அதே சூரிய ஒளியை பயன்படுத்தி நேரடியாக மின்சாரம் உற்பத்தி செய்வதை பற்றி யோசித்ததுண்டா?, மேலும் உங்க மின் கட்டணம் கிரைய வேண்டுமா?. ஆம், சோலார் பேனல்கள் பொருத்தினால்,மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்கலாம்.
இந்த திட்டத்தின் மூலம், ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க அரசின் திட்டம் உள்ளது. இதனால், உங்கள் குடும்பங்களுக்கு பெரிய அளவில் செலவுச் சேமிப்பு ஏற்படும்.
மானியம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்!!
அரசு, சோலார் பேனல் பொருத்துவோருக்கு ஏற்றவாறு மானியம் வழங்குகிறது.
அதாவது, முதல் 2 கிலோவாட் வரை அமைப்பின் மீது ரூ.30,000 – ரூ.60,000 வரை கிடைக்கும், முதல் 3 கிலோவாட் வரை அமைப்பின் மீது ரூ.60,000 – ரூ.78,000 வரை கிடைக்கும், கிலோவாட் மேல் திறனுக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மானியம் கிடைக்கும்.
மின் கட்டணம் பூஜ்ஜியம் எப்படி என்று தானே கேட்குறீங்க!!
அதாவது, 2 முதல் 3 கிலோவாட் சோலார் பேனல் அமைத்தால், மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவீர்கள். ஆகையால், மாதாந்திர மின் கட்டணத்தை குறைக்க உதவியாக இருக்கும். மேலுக்கு, கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்தால், அதை மின்சார வாரியத்திற்கே விற்பனை செய்யலாம் என்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது பற்றி தற்போது பார்க்கலாம்!!
முதலில், pmsuryaghar.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யவும்.பின் உள்நுழைந்து தேவையான தகவல்களை நிரப்பவும். அதன் பிறகு தொழில்நுட்ப அங்கீகாரம் கிடைத்த பிறகு பேனல் பொருத்தவும்.பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பேனல் பொருத்தினால் மானியம் கிடைக்கும்.இந்த சூரிய ஆற்றல் திட்டம், நாட்டின் பசுமை ஆற்றலையும் ஊக்குவிக்கும்.