Sunday, September 28, 2025

விஜய் பரப்புரை – கிறுகிறுக்க வைக்கும் தொண்டர்கள் கூட்டம்! என்னவெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன?

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் மக்களிடம் சந்திப்பு நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் பிரசாரத்திற்கு போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், ஈரோடு சாலை அருகே உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தவெக நிர்வாகம் அறிவித்தது. இதனை முன்னிட்டு, கரூர் போலீசார் 11 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

அவற்றில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தொண்டர்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், கூட்டம் நடத்தும் போது போலீசாருக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், சாலையின் சென்டர் மீடியனில் பதாகைகள் வைக்கக்கூடாது, தொண்டர்கள் அங்கு ஏறி நிற்கக்கூடாது என்பன அடங்கும். மேலும், பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவும், பொதுக்கூட்டமும் நடத்த முடியாது. அதோடு மேடை அமைப்பும், எல்.இ.டி. திரை அமைப்பும் அனுமதிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், கரூரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு விஜய் தொண்டர்களுடன் நேரடியாக சந்தித்து உரையாற்ற உள்ளார். இதே போன்று, நாமக்கல்லிலும் இன்று விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் பிரசாரத்திற்காக போலீசார் 20 நிபந்தனைகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் சூழலில் விஜயின் பிரசாரத்தை முன்னிட்டு, இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News