Monday, December 22, 2025

விஜய் பிரச்சாரம்; பரமத்திவேலூரில் தொண்டர்கள் கொடுத்த பரிசு!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தவெக தலைவர் விஜய் தொடங்கினார். அப்போது, என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று உரையை தொடங்கினார். மேலும் பேசிய விஜய்,திமுக, அதிமுக, பாஜகவை தாக்கி பேசினார். பின்னர், தவெகவுக்கும்- திமுகவுக்கும் தான் போட்டியே என்றார்.

அதன் பிறகு, நமாக்கல் பரப்புரையை முடித்துக் கொண்டு விஜய் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்ட நிலையில் கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூர் பகுதியில் தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் பரப்புரை வாகனத்தின் மேல் விஜய் ஏறினார்.அதன் பின்னர், தவெக தலைவர் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அப்போது, தொண்டர்கள் அளித்த வேல் மற்றும் வெற்றிலையை மாலையை த.வெ.க. தலைவர் விஜய் பெற்றுக் கொண்டார்.

Related News

Latest News