அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சீமானின் பேச்சு சரியாக இல்லை. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமானின் அருவறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்கடுமையாக இருக்கும்”
அதிமுக ஆட்சியில் அமர்வதைவிட கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே எடப்பாடி பழனிசாமியின் ஒரே இலக்கு. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. கட்சி தன் கையில் இருந்தால் போதும் என நினைக்கிறார். 2021 தேர்தலைவிட 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியைச் சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.