ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80-வது அமர்வின் பொது விவாதத்தில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது : “போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் டிரம்ப் மற்றும், அவரது குழுவினர் காட்டிய தீவிர பங்களிப்பிற்கு எங்களின் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது.
டிரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால், ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்.” என்று ஷபாஸ் ஷெரீப் கூறினார்.