தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கத்தை தொடர்ந்து தற்போது வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.
வார இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.90 ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.159 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.