தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற தலைப்பில், தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாளை செப் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், அவர் பிரச்சாரம் செய்யப்போகும் இடம், மற்றும் நேரம் குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சாரம் மேற்கொள்ளும் மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த பதிவில் “தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு: நாமக்கல் மாவட்டம்: இடம்: நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு: 1. திரு.N.சதிஷ்குமார், 2. திரு.J.J.விஜய் செந்தில்நாதன், 3. திரு.S.சதீஸ்குமார், 4. திரு.A.பிரபு, 5. திரு.A.பாலகிருஷ்ணன், 6. திரு.M.விக்னேஷ், 7. திரு.R.இளையராஜா, 8. திரு.K.R.கார்த்திக், 9. திரு.M.மோகன், 10. திரு.S.ஹரிஹரன்.
கரூர் மாவட்டம்: இடம்: கரூர், வேலுச்சாமிபுரம், நண்பகல் 12.00 மணி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு: 1. திரு.V.P.மதியழகன், 2. திரு.G.பாலசுப்ரமணி, 3. திரு.K.R.விக்னேஷ்வரன், 4. திரு.M.சந்தோஷ்குமார், 5. திரு.G.ஆறுமுகம், 6. திரு.R.சசிகாந்த், 7. திரு.P.சதீஷ், 8. திரு.S.சதீஷ்குமார், 9. திரு.P.விஜய் பிரசாத், 10. திரு.S.பவுன்ராஜ், வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவர் அவர்களுடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம்! இப்படிக்கு, என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்” என்று பதிவிட்டுள்ளார்