Friday, September 26, 2025

தங்கத்தை தூக்கி ஓரமா வைங்க! வெள்ளி தான் இனி எதிர்க்காலம்? எல்லாம் அடியோடு மாறும் அதிர்ச்சி!

சமீப காலமாக வெள்ளி விலை வேகமாக அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 25 நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.150க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்து, நகை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் பலவீனம், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்புகள் ஆகியவையே முக்கிய காரணங்கள். இதனுடன், வெள்ளி விநியோக பற்றாக்குறையும் விலை உயர்வில் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக உலகளவில் வெள்ளி விநியோகம் குறைவாகவே உள்ளது. 2025ம் ஆண்டில் 117.6 மில்லியன் அவுன்ஸ் பற்றாக்குறை உருவாகும் என்று உலக வெள்ளி கணக்கெடுப்பு எச்சரித்துள்ளது.

தங்கம் பொதுவாக பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகிறதாலும், வெள்ளி அதே நிலையைப் பெறவில்லை. இருப்பினும், சமீபத்தில் அமெரிக்க அரசு வெள்ளியை முக்கிய கனிமமாக அறிவித்ததோடு, தனது கையிருப்பு இருப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் பிற நாடுகளும் அதேபோன்று செயல்பட வாய்ப்பு அதிகரிக்கிறது.

நவீன தொழில்நுட்ப துறைகளில் வெள்ளி மிகப்பெரிய தேவை கொண்டது. சோலார் பேனல்கள் ஆண்டுதோறும் 193.5 மில்லியன் அவுன்ஸ் வெள்ளியைப் பயன்படுத்துகின்றன. 2025ம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவின் சோலார் பேனல் ஏற்றுமதி 70% உயர்ந்துள்ளது. இந்தியாவும் இத்துறையில் பெரிய நுகர்வோராக இருக்கிறது. மேலும், ஒவ்வொரு மின்சார வாகனத்திற்கும் 50–80 கிராம் வெள்ளி தேவைப்படுகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவதும், இந்தியாவில் வெள்ளி விலை அதிகரிக்க வழிவகுக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கம் அல்லது வெள்ளிக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News